கடவுள்கள் பைத்தியக்காரகளாக இருக்கவேண்டும்கடவுள்கள் பைத்தியக்காரகளாக இருக்கவேண்டும், இல்லையென்றால் ஒரு கோக் பாட்டிலைக்கொண்டு ஒரு இனத்தின் சமூகத்தில் குழப்பம் விளைவிப்பாரா?இருபது வருடங்களுக்குமுன் எனது பள்ளிநாட்களின்போது மதுரை தீபா/ரூபா தியேட்டரில் (இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை) பார்த்த ஆங்கிலப்படமான "The Gods Must Be Crazy - I" பற்றித்தான் சொல்லுகிறேன். சிரிப்பு காட்சிகளும், நல்ல காட்சியமைப்புகளும், நடிகர்களின் அருமையான நடிப்பும் எனது உள்ளத்தை கொள்ளை கொண்டுவிட்டது. இப்படத்தின் கதையையும், நான் அனுபவித்த சந்தோஷத்தை உங்களிடம் பகிர்வதில் மேலும் சந்தோஷம் அடைகிறேன். இந்தப்படம் இரண்டு பாகமாக வந்துள்ளது, இரண்டுமே அருமையாக உள்ளன. இப்பதிவில் முதலாம் பாகத்தைப்பற்றி சொல்லுகிறேன்.தெனாப்பிரிக்காவின் தென்பகுதியில் உள்ளது கலஹாரி பாலைவனம், வருடத்தின் 9 மாதங்கள் மழை இல்லாமல் நீரோடைகள் எல்லாம் வற்றி குடிக்க ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல் விலங்குகளெல்லாம் இடம் பெயர்கின்றன. மனிதர்கள் வாழத்தவிற்க்கும் அந்த இடத்தில் புதர்-மனிதர்கள்(bush man) என்றழைக்கப்படும் பழங்குடியினர்மட்டுமே வாழ்கின்றனர். கபடமில்லாமல், நட்புணர்வுடன் பழகி ஒரு சமூகமாக கூட்டம் கூட்டமாக வாழும் அவர்கள் வசிக்கும் இடத்தை கடக்கும் விமானத்திலிருந்து ஒரு காலியான கோக் பாட்டிலை கீழே எறிகிறார் அந்த விமானி. கடவுள் கொடுத்த பரிசாக அதை எண்ணி, பயன்படுத்துகிறார்கள் அந்த பழங்குடி மக்கள். ஆனால் வந்தது வினை, கடவுளின் பரிசுப்பொருளை பயன்படுத்துவதில் போட்டி, பொறாமை, சண்டை வந்துவிடுகிறது அவர்களுக்குள். என்னடா கடவுள் பரிசுப்பொருளோடு தீமைகளையும் சேர்த்து அனுப்பிவிட்டாரே கடவுளிடமே திருப்பிகொடுத்துவிடுவோம் என்று பார்த்தால் கடவுளும் திரும்பி வாங்கிக்கொள்ள மாட்டென் என்கிறார். சரி இது பூமியை சேர்ந்தது இல்லை ஆதலால் பூமிக்கு வெளியே எறிந்துவிடுவோம் என்று முடிவு செய்து. அவர்களில் ஒருவர் அதை எடுத்துக்கொண்டு பூமியின் முடிவுப்பகுதியை கண்டுபிடிக்க செல்கிறார். போகும் வழியே கிராமத்து மனிதர்கள், நவநாகரீக மனிதர்களை எல்லாம் சந்திக்க்கும் அவரின் அனுபவம் தான் இந்தப்படம். அனுபவம் என்றால் சாதாரனமான அனுபவம் அல்ல நன்பர்களே மனதைவிட்டு நீங்காத நினைவுகளாக்கும் அளவுக்கான அற்புதமான அனுபவங்களாகும்.இப்படத்தைப்பார்த்தவர்கள் இப்படத்தினைப்பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்தால் மேலும் மகிழ்ச்சிகொள்வேன். எனது DDLJ பதிவினை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.என்ன நன்பர்களே என்னுடன் கலஹாரி பாலைவனத்துக்கு வரத்தயாராக இருக்கின்றீர்களா? போவோமா?கருனை மிக்க புதர் மனிதர்கள்சாதாரனமான மனிதர்கள் தாகத்தால் சிலநாட்களுக்குள் மடியக்கூடிய தண்ணீரே கிடைக்காத அந்த இடத்தில் வாழும் கலையறிந்தவர்கள் அந்த புதர்-மனிதர்கள். செடிகளின் இலைகளில் படிந்த்திருக்கும் பணித்துளிகளை சேகரித்தல், பூமிக்கடியில் இருக்கும் ஒருவகை கிழங்கினை கண்டுபிடித்து அதிலிருக்கும் நீரை எடுத்தல் மேலும் தண்ணீர் இல்லாமலே வழ்ந்து பழக்கப்பட்டு அதன்மூலம் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கிறார்கள்.அவர்களுக்குள் குற்றங்கள் இல்லை, தண்டனைகள் இல்லை, தீவிரவ்வதங்கள் இல்லை, சட்டங்கள் இல்லை, காவலர்கள் இல்லை, தலைவர்க்ள் இல்லை அவர்கள் கடவுளை மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்ட்களை மட்டும் நம்புகிறார்கள். அவர்களை பொறுத்தவரையில் இந்த உலகத்தில் கெட்டவைகள் எதுவுமே இல்லை. கொடிய விஷம் நிறைந்த பாம்புகள் கூட கெட்டவைகள் அல்ல, அது சுவையானது, அதன் தோல் மிக பயனுள்ளது.அவர்களின் ஒரு சமூகம் அவர்களின் மற்ற சமூகத்தை வருடத்துக்கு ஒருமுறைதான் சந்திக்கின்றனர். பெரும்பாலும் மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டே இருக்கின்றனர். அவர்களைத்தவிற மற்ற இனத்தோரை அறியாமலிருக்கின்றனர், மனித சமூகத்தைபற்றியே தெரியாமலிருக்கின்றனர்.படத்தின் கதாநாயகன் க்ஷிவானில் ஆகாயவிமானம் செல்லும்போது ஏற்ப்படும் சப்தத்தினை, கடவுள் நிறைய சாப்பிட்டதனால் உண்டாக்கும் ஏப்பம் என்று எண்ணிக்கொள்கின்றனர்., அவர்கள் மிகவும் மிருதுவானவர்கள், தங்கள் குழந்தைகளிடம் கடுமையாக மற்றும் கோபமாக பேசி அறியாதவர்கள். அதனால் குழந்தைகளும் மிகவும் நன்நடத்தை கொன்டோர்களாயிருக்கின்றனர்.பொருட்களை சொந்தம் கொன்டாடாமையே அவர்களை மற்ற இனத்தோரிடமிருந்து மிகவும் பிரித்துக்காட்டுகிறது. எல்லாமும் எல்லோருக்கும் சொந்தம் என்று நினைக்கிறார்கள் நம்புகிறார்கள்.அவர்களுக்கு உனவு தேவைப்படும் பட்சத்தில், தூக்கமருந்த்து கலந்த அம்பின்மூலம் மான்களை வேட்டையாடி, அதை கொல்லும் முன் அதனிடம் மன்னிப்பு கேட்டு, தன் குடும்பத்துக்கு உணவு தேவைப்படும் காரணத்தை சொல்லி, வேண்டி பிறகு கொன்று சாப்பிடுகின்றனர்.அவர்கள் மிகக்கடினமான பொருட்க்களாக கருதுவது மிருகங்களிம் எலும்புகளையும், மரங்களையும்தான்.அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 600 மைல்களுக்கு அப்பால், நாகரீக மணிதன் இருக்கின்றான். அவனைப்பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.வேட்டையாடிய மானிடம் மண்ணிப்பு கேட்டல்ஆனால் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 600 மைல்களுக்கு அப்பால், நாகரீக மணிதன் இருக்கின்றான். வீட்டுக்கருகில் இருக்கும் தபால் பெட்டியில் தபாலை போடுவத்ற்க்கு கூட காரை உபயோக்கிக்கின்றான். வாழ்கையின் தேவைகளுக்கேற்ப்ப தன்னை மாற்றிக்கொள்ளாமல், வாழ்கையையே தனக்காக மாற்றிக்கொண்டவன். மிண்ணனு சாதனங்கள், வசதிகள் குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்புகள், எப்படி இந்த போடிகள் நிறைந்த உலகில் தாக்குபிடிப்பது என்று போதிக்கின்றன. சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்ப்ப வாழும் முறையை மறுத்து, சூழ்நிலையை தனக்கு சாதகமாக்க துடிக்கின்றான்.நாகரீக மனிதர்கள்காலை 7.30 மனிக்கு சூழ்நிலையில் ஒன்ற ஆரம்பிக்கிறான். 8 மனிக்கு பணியில் சேர்கின்றான், 10.30 மணிக்கு 15 நிமிடம் ஓய்வெடுத்துக்கொள்கிறான், மீண்டும் சுறுசுறுப்பாக வேலையிலீடுபடுகின்றான். தினத்தின் நேரத்தின் ஓவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சூழ்நிலையில் பணியாற்றவேண்டிய நிலையிலிருக்கின்றான். திங்கள் கிழமையிலிருந்த்து வெள்ளி அல்லது சனிக்கிழமை வரை பரபரப்புதான்.காலை 7.30 மணிக்கு பரபரப்பு ஆரம்பித்துவிடுகிறதுஇங்கு படத்தின் கதாநாயகி கேத் ஒரு பதிப்பகத்தில் வேலை பார்ப்பதை காட்டுகிறார்கள். அவர் கலஹாரி பாலைவனத்துக்கருகில் உள்ள போட்ஸ்வானா கிரமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியை வேலைக்கு போக கேட்டுகொள்ளப்படுகிறார்.கலஹாரி பாலைவனத்திலுள்ள புதர்-மனிதர்களுக்கு எப்பொழுதுமே, திங்கள், வியாளன் அல்லது ஞாயிறுதான். கடிகாரமோ, காலண்டரோ அவர்களுக்கு கிடையாது.கதாநாயகி கேத் தாம்சன்புதர்மனிதர்கள் எப்போழுதாவது, வாணத்தில் வித்தியாசமாகு சப்தமிட்டுக்கொண்டு செல்லும் பறவையினை கான்கிறார்கள். அந்த பறவையானது சிறகுகளை அடித்துக்கொள்ளாமல், பறாக்கின்றது.ஆகாய விமானத்தைத்தான் அவர்கள் பறவை என்று என்னிக்கொள்கின்றாகள். அப்படித்தான் நமது கதாநாயாகன் க்க்ஷி ஒருமுறை கானகத்தில் வழியே நடந்துகொண்டு வந்திருக்கும் வேளையில், விமானத்தில் பறந்துகொண்டிருக்கும் ஒரு விமாணி ஒருவர் கோகோ-கோலா பாணத்தை குடித்துவிட்டு காலி பாட்டிலை விமானத்திலிருந்து கீழே எறிகிறார்.வினையை ஆரம்பித்து விட்டார்அது க்க்ஷி க்கு முன்னால் வந்து விழுகிறது. க்க்ஷி அதை பார்கிறார் அதுபோன்ற ஒருபொருளை வாழ்நாளில் பார்த்தது இல்லை. தண்ணீரைப்போல இருக்கிறது ஆனார், தான் பார்த்த பொருட்கள்ளிலேயே மிகாக்கடினமான பொருளாக இருக்கின்றது, இதை ஏன் கடவுள் இங்கு அனுப்பித்து வைத்தார்?கடவுள் கொடுத்த பரிசுஅதை எடுத்துக்கொண்டு தன் சமூகத்தாரிடம் செல்கின்றான். அது அவர்களுக்கு, மிக அழகான மற்றும் வித்தியாசமான பொருளாகப்படுகின்றதுஒரு தாத்தாவின் விரல் அதில் மாட்டிகொள்ள, குழந்தைகளுக்கோ ஒரே சிரிப்பு.என்ன இப்படிஒரு அழகான பரிசை கடவுள் அனுப்பியிருக்கின்றார்குழந்தைகளுக்கோ ஒரே சிரிப்புவிலங்குகளின் எலும்புகள், கடினமான மரத்துண்டுகள், கற்களையே உபயோகப்படுத்திக்கொண்டிருந்த அவர்களுக்கு, கடவுளின் அந்த பரிசு ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது. தானியங்களை இடித்து மாவாக்குதல், கிழங்குகளையும் கொட்டைகளையும் உடைத்தல், பதப்படுத்தப்பட்ட பாம்புத்தோலை மிருதுவாக்குதல், பாம்புத்தோலுக்கு வர்ணமிடல், அதன் தலைப்பகுதியில் காற்று ஊதி இசை எழுப்புதல் என்று பலவகையான உபயோகத்துக்கு உட்படுத்துகின்றனர்.நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதியதொரு உபயோகம்கடவுள் கொடுத்த பரிசுகளிலேயே இதுதான் மிக அற்புதம் என்று சொல்லி மகிழ்கிறார்கள். வேலையை மிச்சப்படுத்தும் உன்னதமான உபகரனமாக திரிகின்றது. ஒவ்வொருநாளும் புதுப்புது உபயோகங்களை கண்டு பிடிக்கின்றனர். கடவுளின் அந்த பரிசானது அவர்களின் வாழ்கைத்தேவைக்கு இன்றியமையாததாக ஆகிவிடுகிறது. அதை சார்ந்திருப்பதை தவிர்க்கமுடியாதது ஆகிவிடுகிறது.ஆனால் கடவுல் கவனக்குறைவாக இருந்துவிட்டார், ஆமாம் ஒரே ஒரு பரிசைமட்டுமெ அனுப்பித்துவிட்டார். ஒருவர் உபயோகப்படுத்தி கொண்டு இருக்கும்போது மற்றவர் காத்திருக்கவேண்டி இருக்கிறது. வாழ்கையில் முதல் தடவையாக ஒரு பொருளை மற்றவர்களோடு பகிர தயங்குகின்றனர். சடாரென ஒவ்வொருவரும் அதை நீண்டநேரம் வைத்துக்கொள்ள நினைக்கின்றார்கள்.இதுவரை அறிந்திராத மற்றும் அனுபவித்திராத மனவெழுச்சியெல்லாம் உணர்கிறார்கள். அனுமதி கேட்காமலேயே மற்றவரிடம் இருந்து எடுத்துக்கொள்வது, என்னடா இப்படி பிடுங்கிக்கொண்டானே என்ற வருத்தம் போன்ற பழகியிராத உணர்ச்சிகள், உத்வேகங்கள் எல்லாம் தோன்றுகின்றன. நாமே சொந்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகின்றது.க்ஷி எல்லாவறையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார், மனதில் கவலை வருகிறது, கடவுளின் இந்தபரிசானது தேவை இல்லாத சங்கதிகளையெல்லாம் நம் சமூகத்தில் உருவாக்குகிறதே என்று வருத்தம் மனதில் சூழ்கிறது.நிலமை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே போகின்றது. கோபம், பொறாமை, வெறுப்பு முடிவில் கைகலப்பும் ஆரம்பித்துவிடுகிறது. குழுவில் ஒரு பென்ன்னவள் கடவுளின் அந்த பரிசை உபயோகப்படுத்தி கொண்டு இருக்கும்போது இன்னொரு பென் அதை பிடுங்கிக்கொண்டு போகிறாள். அதைக்கண்ட அந்த முதல் பென் கோபம் கொண்டு மறுபடியும் அவரிடமிருந்து பிடுங்கிக்கொள்கிறார். அது கைகலப்பாகிவிடுகிறது. குழந்தைகள் எல்லாம் தங்கள் விளையாட்டை நிறுத்திவிட்டு என்னடா வித்தியாசமான சூழ்நிலையாக இருக்குதேன்னு பாக்குறாங்க. பெரியவர்களோ இப்படி ஒரு நிலையை சந்தித்ததே இல்லை என்பதால், அவர்களை விலக்கிவிடக்கூட தோன்றாமல் கவலை தோய்ந்த முகத்துடன் பார்க்கின்றார்கள்.ஒரு பென் இன்னொரு பென்னின் தலையில் அந்த பரிசுப்பொருளினால் ஓங்கி அடித்துவிடுகிறார், ரத்தம் பீரிடுகிறதுபரிசுப்பொருளுக்காக கைகலப்புஇதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த க்ஷி க்கு கடவுளின்மீது கோபம் வந்துவிடுகிறது. வானத்தை நோக்கி கத்துகிறார், உன்னுடைய பொருளை நீ திரும்பி எடுத்துக்கொள், எங்களுக்கு இது தேவையில்லை. இது கொண்டுவந்த பிரச்சினைகளைப்பார், என்று கத்தி, கடவுளின் அந்த பரிசுப்பொருளை வாணத்தை நோக்கி எறிகிறார். ஆனால் கடவுள் அதை திரும்ப எடுத்துக்கொள்ள மறுக்கின்றார், அது கீழே வந்து விழுகிறது. மறுபடியும் கத்துகிறார், இப்படிப்பட்ட ஒரு பொருளை எங்களுக்கு அனுப்பியதற்கு நீ பைத்தியமாகத்தான் இருக்கனும், திரும்ப எடுத்துக்கொள் என்று மீண்டும் வாணத்தை நோக்கி எறிகிறார், ஆனால் க்ஷி யின் வேண்டுகோள் இந்தமுறையும் நிராகரிக்கப்படுகிறது மீண்டும் கீழே நோக்கி வருகிறது, வந்து ஒரு சிறுமியின் மண்டையை பதம் பார்க்கிறது. கடவுளின் பொறுப்பற்ற தன்மையை நொந்துகொண்டே அதை எடுத்துப்பொய் ஒரு குழிதோண்டி புதைத்துவிடுகிறார்.மாலையில் எப்பொழும் அனைவரும் ஒன்றாக அமர்ந்த்து சிரிப்பு, கேலி, கிண்டலோடு சந்தோஷமாக உரையாடும் பழக்கம் கொண்ட அவர்களுக்கு அந்த மாலைப்பொழுது சந்திப்பு, அமைதியாக நடக்கிறது, யாருமே பேசத்தயாராக இல்லை. இப்படி கீழ்த்தரமாக நடந்துகொண்டோமே என்ற அவமான உணர்வு ஒவ்வொருவரையும் பிடுங்குகிறது. க்ஷி சொல்லுகிறார், யாரும் கவைப்படாதீர்கள், நான் அந்த பரிசுப்பொருளை குழியில் புதைத்துவிட்டேன், அது நம்மை மீண்டும் சங்கடங்களுக்கு உள்ளாக்காது.ஆனால் க்ஷி யின் நினைப்பு நடக்கவில்லை, ரத்தம் தோய்ந்த அந்த பாட்டிலை போப்பம் பிடித்த கழுதைப்புலி ஒன்று இரவில் தோண்டி வெளியே எடுத்துபோடு விடுகிறது. மறுநாள் காலையில் அதை எடுக்கும் இரண்டு சிறுவர்களுக்குள் அதை வைத்துக்கொள்ளும் போட்டியில் சண்டை வந்து மீண்டும் ஒரு சிறுவனின் மண்டை இன்னொசிறுவனால், அந்த்த பரிசுப்பொருளின் மூலம் உடைக்கப்படுகிறது.அன்றிரவு சந்திப்பின் போது அனைவரும் மிக்க கவலைகொண்டோராக இருக்கின்றார்கள். அதுக்கு அப்பொழுதுதான் ஒரு பெயரிடவேண்டும் என்று தோன்றுகிறது, அதை தீமையான-பொருள் என்று அழைக்கின்றனர். வயதான ஒரு பெரியவர் சொல்கிறார், கடவுள் இந்த தீமையான-பொருளை கீழே அனுப்பும் போது தன்நிலை மறந்தவராக இருந்திருப்பர் போல. கடவுள்கல் எப்பவுமே நமக்கு மழை, மரங்கள், கிழங்குகள், பழங்கள், விலங்குகள் போன்ற நல்ல பொருட்களைமட்டுமே அனுப்பியிருக்கின்றனர், எனென்றால் நாமெல்லாம் அவர்களின் குழந்தைகள், நம்மில் அதிகமான விருப்பம் கொண்டோராக இருக்கின்றனர். ஆனால் இப்பொழுதோ இப்படி ஒரு தீமையான ஒரு பொருளை அனுப்பி இருக்கின்றனர்.இப்படி தீமையான-பொருளை கடவுள் அனுப்பிவிட்டாரேக்ஷி சொல்லுகிறார், இது இந்த பூமியை சேர்ந்த பொருள் இல்லை, நாளை பூமியின் முடிவுப்பகுதிக்கு எடுத்துச்சென்று வெளியே எறிந்துவிடுகிறேன்.பெரியவர் சொல்லுகிறார், பூமியின் முடிவுப்பகுதி, அதிக தொலைவில் உள்ளது என்று நினைக்கிறேன், நீ நடந்து செல்வதுக்கு 20 லிருந்து 40 நாட்கள் ஆகலாம்.நாளை காலையில் நான் நடக்க ஆரம்பிக்கின்றேன் என்று க்ஷி சொல்லுகிறார். அனைவரும் ஒப்புக்கொள்வதாக முடிவு செய்கின்றனர். க்ஷி யின் பயனம் வெற்றிகரமாக முடிய வாழ்த்தி விடைகொடுக்கிறாகள்.பயனம் வெற்றிகரமாக முடிய வாழ்த்தி விடைகொடுக்கிறாகள்2000 மயில்களுக்கப்பால் பிரானி நகரில் ஒருப்பிரச்சினை நடக்கிறது. நாட்டின் அமைச்சர்கள் அதிபரின் தலைமையில் அரசாங்க அலுவலகத்தின் ஒரு அறையில் ஒருசந்த்திப்பில் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்தைஎதிர்க்கும் 10 பேர்கள் கொண்ட, தீவிரவாதக்குழு ஒன்று அறைக்குள் புகுந்த்து அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சிக்கின்றது. மூன்று அமைச்சர்கள் கொல்லப்படுகின்றனர். குறிவைக்கப்பட்ட நாட்டின் அதிபர், தப்பிவிடுகிறார். விசாரனையில் அவர்கள் சம்போகா என்னும் பெயருள்ள ஒருவனை தலைவராகக்கொண்டு செயல்படும் தீவிரவாதக்குழு என்று தெரிகிறது. தீவிரவாதக்குழுவினர் சுட்டுவிட்டு தப்பிக்க முயலுகையில் அவர்களில் இரண்டுபேர் காவலர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். தலைவன் இருக்கும் இடத்தை காட்டிக்கொடுக்க மறுக்கின்றார்கள்.காயமடைந்த அதிபர்மாட்டிக்கொண்ட இருவரையும் ஹெலிகாப்டரில் ஏற்றும்படி தலைமைக்காவலர் உத்தரவிடுகின்றார். தப்பியோடியவர்களை தேடி பின்தொடர்ந்து ஒரு பீரங்கி வாகனம் செல்கிறது.மாட்டிக்கொண்ட இருவரிடமிருந்தும் உண்மையை வரவழைக்க நூதன திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகின்றது.ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்ட இருவரின் கண்களும் கட்டப்படுகின்றன. ஹெலிகாப்டர் உயரே பறக்க ஆரம்பிக்கின்றது. விசாரனை ஆரம்பமாகின்றது, மீண்டும் காட்டிக்கொடுக்க மறுக்கிறார்கள், தலைமைக்காவலர் கோவம் வந்து, அவர்களில் ஒருவனை பிடித்து பறந்துகொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் இருந்து வெளியே தள்ளிவிடுகின்றார், கீழே விழும் அவன் அலறித்துடித்தபடி, தன் தலைவன் இருக்கும் இடத்தைபற்றி சொல்லிவிடுகின்றான். உண்மையில் ஹெலிகாப்டர் மேலே பறக்கவேஇல்லை, சும்மா இறக்கைகளைமட்டும் சுழல விட்டபடி, தரையிலேயே நின்றுகொண்டிருக்கின்றது. கீழே விழுந்தவன் வானில் உயரத்திலிருந்து விழுகின்றோம் என்று எண்ணி உண்மையை சொல்லிவிடுகின்றான்.கண்களைக்கட்டி உயரே கொண்டு சென்றுஹெலிகாப்டரில் இருப்பவர்களும், பீரங்கி வாகண காவலர்களும், ஒன்றாக சேர்ந்த்து தீவிரவாதிகள் இருக்கும் இடத்துக்கு சென்று தாக்குதல் நடத்துகிறார்கள். தீவிரவாதக்குழுக்கள் தாக்குப்பிடிக்க முடியாமல், இரண்டு ஜீப்பில் ஏறி, தப்பி ஓடுகின்றனர், அவர்கள் தப்பி ஓடுவது கலஹாரி காட்டுக்குள். இந்த தீவிரவாதி குழுதலைவன், மற்றும் மற்றவர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான் குனாதிசயங்கள் கொண்டவர்களாக இருப்பர். அதில் இருவர் யாருடனும் பேச மாட்டார்கள் ஆனால் எப்பொழுபார்த்தாலும் அவர்கள் இருவர் மட்டும், சீட்டு விளையாண்டுகொண்டே இருப்பார்கள். காட்சிகளும் நகைச்சுவையாக எடுத்திருப்பர்.தீவிரவாதிகளின் தலைவர், தீராதவியாதிகளின் தலைவர் இருப்பார்இடையில் க்ஷி காட்டினுள் செல்லும்போது தண்ணீர் குடிக்க அந்த பாட்டிலை கீழே வைக்கும் பொழுது ஒரு குரங்கு அதை எடுத்துக்கொண்டு ஓடுகிறது. க்ஷி அதை விரட்டிக்கொண்டு ஓடுகிறார். அது ஒரு மரத்தின்மேல் சென்று அமர்ந்துகொள்கிறது,குரங்கிடம் வெகு சிரத்தையாக அதைப்பற்றி சொல்ல ஆரம்பிக்கின்றார்.நீ வைத்திருப்பது எவ்வளவு தீமை நிறைந்தது தெரியுமா? நீ அதை திருப்பி என்னிடம் கொடுத்துவிடுவதுதான் உனக்கு நல்லது, நான் அதை இந்த பூமியை விட்டு வெளியே எறிந்துவிடுவேன். இது நிறைய சங்கடங்களையும் கஷ்டங்களையும் என் குடும்பத்துக்கு கொண்டு வந்தது. நீ அதை என்னிடம் கொடுக்காவிட்டால், உன் குடும்பத்துக்கும் அதே கஷ்டங்கள் வரும். குரங்கு கவனிக்கும் வரையில், மிகவும் பொறுமையாகவும், சிரத்தையாகவும் பேசுகின்றார்.குரங்கு எப்படி சமாதானமானதோ, அந்த பாட்டிலை கீழே போட்டுவிடுகிறது. குரங்கின் புத்திசாலித்தனத்தை பாராட்டிவிட்டு பயனத்தை தொடர்கின்றார்.திருப்பி கொடுத்துவிடுவதுதான் உனக்கு நல்லதுகலகாரி பாலைவனக்காட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய ஊர், போட்ஸ்வானா பேருந்து வசதிகள் உண்டு, நம்ம நிலக்கோட்டை போன்ற ஊர். அதுக்கருகில் உள்ள ஒரு கிராமம் மபுலா, அங்கு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியையாக கதாநாயகி கேத் தாம்சன் வருகிறார். மபுலா கிராமத்தில் மிருகங்களைப்பற்றி ஆராய்ச்சிசெய்யும் டாக்டர் ஆண்ட்ரு-ஸ்டேன். மிகவும் நட்ப்புணர்வுடன் எல்லோரிடமும் பழகும் இவரின் செய்கைகள் சிரிப்பை வரவழைக்கும்படி இருக்கும். சார்லி-சாப்ளினை நினைவுபடுத்துவதுபோல இருக்கும். இவர்தான் படத்தின் இரண்டாம் நாயகர்.படத்தின் இரண்டாம் நாயகன் ஸ்டேன்இவர் ஒரு ஜீப் வைத்திருப்பர் பாருங்கள், உலகத்தின் பாடாவதி ஜீப் அதுவாகத்தான் இருக்கும். கை பிரேக் கிடையாது, இஞ்சின் நின்றுவிட்டால் மறுபடியும் ஆரம்பிக்காது, கதவுகளை திறக்க லாவகம் தேவை, நுட்ப்பம் தெரிந்தவர்கள்மட்டுமே திறக்க முடியும், முன்பக்க கன்னாடிகள் கிடையாது. இந்த காரைவைத்து நிறைய நகைச்சுவைக்காட்சிகள் உள்ளன. இந்த கார்தான் மூன்றாவது நாயகன்.மூன்றாவது நாயகனை கிளப்ப குதிரையின் தயவு தேவைபோட்ஸ்வான ஊரிலிருந்து மபுலா கிராமத்துக்கு பேருந்து வசதி கிடையாது. எனவே, போட்ஸ்வானவுக்கு பஸ்ஸில் வரும் நாயகி கேத் அவர்களை தனது ஜீப் மூலம், மபுலா வுக்கு அழைத்துவர நட்பின்பேரில் கேட்டுக்கொள்ளப்படுகிறார் ஸ்டேன். அவரும் சரியென்று கிளம்புகின்றார், காரி கிளப்புவத்ற்கே குதிரையின் தயவு வேண்டியிருக்கின்றது. போகும் வழியில், காரை வைத்து நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ளுகிறார். கை பிரேக் கிடையாது, இஞ்சின் நின்றுவிட்டால், மீண்டும் கிளம்பாது எனவே, ஒரே ஆளாக காரையும் சமாளித்து வழியில் எதிர்ப்படும் ஆளில்லா வாயில்-கதவுகளை திறந்து மூடுவதற்கு சிரமப்படுகிறார், நகைச்சுவையாய் செல்கிறது. ஒருவழியாக நாயகி இருக்கும் இடத்துக்கு சென்று அழைத்து வருகிறார்,கன்னாடியை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று இல்லாத கன்னாடியில் சோப்புநுரை அடித்து, நாயகியின் முகத்தில் ப்பபபச்ச்ச்சசக்நாயகிக்கோ ஜீப்பின் மகத்துவம் பற்றி தெரியாது. ஓரிடத்தில், வாயில்-கதவௌ எதிர்ப்பட, ஸ்டேன் ஜீப்பை மெதுவாக ஒட்டிச்சென்று, ஓடியபடியே கீழே இறங்கி, கதவை திறந்து ஜீப் போனப்புறம் மூடி, பிறகு ஓடிச்சென்று ஜீப்பில் எறத்திட்டமிட்டு ஜீப்பைவிட்டுன் கீழே குதிக்கிறார், இதுபற்றி தெரியாத நாயகியோ, என்னடா இப்படி ஓடும் காரிலிருந்து கீழே குதித்துவிட்டானே என்று அலறுகிறார். விஷயம் அறிந்து திட்டுகிறார், ஸ்டேன் மீது ஒரு குழப்பமான அபிப்பிராயம் வருகிறது.ஆ...ஆ...ஆ... இந்த ஆளைப்பாருங்களேன், ஒடும் ஜீபில் என்னை தவிக்கவிட்டு கீழெ தாவிவிட்டான்நமது நாயகன் க்ஷி, காட்டு வழியில் வரும்பொழுது, கிராமவாசி ஒருவன் வேட்டையாடும் களைப்பாற, துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு ஆனந்தமாக பாட்டுப்பாடிக்கொண்டிருக்கின்றான். அதைப்பார்க்கும் க்ஷி, பார்ப்பதற்க்கு வித்தியாசமாக இருக்கும் இந்த மனிதன் நம்மை வாழ்த்தி வரவேற்கின்றானே, ஆனால் நம்மை கவனிக்காமல் இருக்கின்றானே என்று ஆச்சரியமாக பார்க்கிறார்.அருகில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து அழகான குச்சியாக இருக்கிறதே, என்று என்னி, கிராமத்தானிடம் கேட்க்கிறார், என்னது இது எந்த மரத்தில் இது வளர்ந்தது? க்ஷியின் பாசை புரியாத கிராமத்தான், துப்பாக்கியும், வில்லுமாக ஆதிவாசி ஒருவன் மிரட்டுவதைப்பார்த்து கைகளை உயர்த்தி சரனடைகின்றான்.நின்னை சரனடைந்தேன்பின் அலறித்துடித்தபடி தப்பித்து ஓடுகிறான், அதைப்பர்த்த க்ஷி, என்னடா இது எதைப்பார்த்து இப்படி ஓடுகிறான்? பின்னால் எதோ ஒரு மிருகம் வருதுபோல என்று என்னி அவரும் தப்பிக்க ஓடுகிறார்.ஆகா என்னமோ வருதுடாஉயிர் தபிக்க ஓடுபிறகு பின்னால் எதுமே வராததைப்பர்த்து நின்று யோசித்ததில், பளீரென உண்மை புலப்படுகிறது, தான் கையில் வைத்திருக்கும் தீமை நிறைந்த இப்பொருளைப்பார்த்துதான் இப்படி அலறித்துடித்து ஓடியிருக்கின்றான். இப்படி ஒரு தீமையான-பொருளை எடுத்தும் நல்ல மக்களையும் துன்புறுத்துகின்றோமே என்று நொந்தபடி, பூமியின் முடிவைத்தேடி பயனத்தை தொடர்கிறார்.ச்ச்சே இதைவைத்து நல்ல மனிதர்களையும் துன்புறுத்துகிறோமேஸ்டேன் மற்றும் கேத் வரும்வழியில், ஜீப் இரு ஆற்றை கடக்கும்போது நடுஆற்றில் நின்றுவிடுகிறது. சேருமிடத்துக்கு இன்னும் 30 மைல்கள் போகவேண்டும், ஆனால் ஜீப் பழுதடைந்த்துவிட்டது, ஊருக்குள் தகவல் அனுப்பி ஆளை வரச்செய்து, சரிபன்ன உடனே முடியாது, மாலையாகிவிட்டது, காலையில்தான் யாரும் வருவர், எனவே இரவு அந்த காட்டிலேயே தங்க முடிவு செய்கின்றனர். கேத் உடம்பில் தண்ணீர் படாமல் கரைக்கு அழைத்துச்செல்கின்றேன் என்று அவரை தூக்கிச்செல்கிறார் ஸ்டேன், வெற்றிகரமாக கரையை நெருங்கியாயிற்று, கீழே இறக்கிவிடும்போது கால் இடறி ஆறுக்குள் விழுகிறார் கேத். ஒழுங்காக நடந்துவந்தாலாவது கால் மட்டும் நனைந்திருக்கும், தூக்கிவருகிறேன் பேர்வழி என்று மொத்தமாக நனைத்துவிட்ட ஸ்டேன் மீது கேது க்கு பயங்கரமான கோபம் வருகிறது. ஸ்டேனுக்கோ என்னட இது, இப்படி ஒரு பென்னுடன் தனியாக வரும் சந்தர்ப்பம் கிடைத்தும் இப்படி சொதப்புறோமே என்று வருத்தம் உண்டாகிறது. செய்த தவறுகளை ஈடுகட்டி, கேத் இடம் நல்லபேர் வாங்கவேன்டும் என்று நினைக்கிறார்.நனையாமல் தூக்கிச்சென்றுகரைக்கு வந்து இருவரும் தனித்தனியே சென்று உடைமாற்றுகிறார்கள், ஸ்டேன் உள்ளடையுடன் இருக்கும்போதுதானா ஒரு காட்டுப்பன்றி அவரை துரத்தவேண்டும், அவர் விழுந்தடித்துக்கொண்டு ஓடி, அங்உ உள்ளாடைகளுடன் மறைவில் நின்றுகொண்டிருக்கும் கேத் மீது மோதி விழுகிறார். கேத்துக்கோ பயங்கர எரிச்சல், வேண்டுமென்றே உடைமாற்றும் வேளையில் அரைகுறை ஆடையுடன் தப்பான நோக்கத்தில் வந்திருக்கின்றார் என்று என்னுகிறார். ஸ்டேன் சொல்லும் காரனத்தை கேத் காதுகொடுத்து கேட்கமாட்டேன் என்கிறார், ஒரு கம்பைஎடுத்து தற்காக்கும் நோக்கில், ஸ்டேனை விரட்டுகிறார். காரணத்தை விளக்கும் சந்தர்ப்பம் கொடுக்கப்படாமலேயே சோகத்துடன் ஸ்டேன் இடத்தைவிட்டு அகலுகிறார்.ஆனையிட்டேன் நெருங்காதேஇரவு இரண்டுபேரும் தீ மூட்டி காபி தயாரித்து குளிர் காய்ந்த்துகொண்டிருக்கிறார்கள். அப்பொழுது தூரத்தில் ஒரு காண்டாமிருகம் வருவதை ஸ்டேன் பார்த்துவிடுகிறார், காட்டில் எங்கேனும் தீப்பிடித்தால் அதை மனல்கொண்டு அனைப்பதுதான் காண்டமிருகத்தில் வேலை. ஸ்டேன் காண்டமிருகத்தை பார்த்ததும் ஒடு ஓடு என்று கூக்குரலிட்டவாரே கேத்தை தள்ளிவிட்டு ஓடுகிறார். கேத்துக்கோ ஒன்றும் புரியவில்லை, அவர் காண்டாமிருகத்தை பார்க்கவில்லை, ஸ்டேன் ஒடு என்று கத்தி மூர்க்கத்தனாமாக மோதிய ஒன்றுமட்டுமே தெரிகிறது. கண்ணை மூடிக்கொண்டு ஓடி ஒரு மரத்தில் ஏறி அமர்ந்துவிடுகிறார். அதற்க்குள் காண்டாமிருகம் தீயை அனைத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு போய்விடுகிறது. காண்டாமிருகம் வந்ததையோ அது தீயை அனைத்ததையோ, கேத் பார்க்கவில்லை, அவர் மரத்தின் உச்சியில் ஏறி அமர்ந்து கீழே பார்க்கையில், சரியாக அனையாமல் இருக்கும் தீயை ஸ்டேன் அனைப்பதைப்பார்க்கிறார். என்னடா இது நம்மை ஓடசொல்லிவிட்டு தீயை அனைத்துக்கொண்டிருக்கின்றாரே, என்னமாதிரியான பைத்தியக்காரத்தனம்? ஸ்டேன் என்னமாதிரியான ஆள் என்று தீர்மானம் செய்யமுடியாமல் குழம்புகிறார். கீழே இறங்கி வந்தபிறகு, சொல்லுகிறார், காண்டாமிருகம் வந்து தீயை அனைத்துவிட்டு போய்விட்டது என்று, ஆனால் கெத்துக்கோ பயங்கரகோபம், தானே தீயை அனைத்துவிட்டு, இல்லாத காண்டாமிருகத்தின் மீது பழிபோடுகிறானே என்று. என்ன கதை விடுகிறீர்கள், நீங்கள் அனைப்பதை நாந்தான் பார்த்தேனே என்கிறார். இது கதை இல்லை பாருங்கள் மறுபடியும் தீயை மூட்டுகிறேன் காண்டாமிருகம் வரும் என்று சொல்லி தீயை மூட்டினால் காண்டாமிருகம் வரவே இல்லை, அதுக்கு பதிலாக காட்டுவாசிகள் இருவர் வந்து ஏன் தீயை மூட்டுகிறீர்கள், காண்டாமிருகம் வரும் என்று அவர்கள் பாஷையில் சொல்லுகிறார்கள். ஸ்டேன் கேத்திடம் சொல்லுகிறார், பார்தீர்களா இவர்களும் சொல்லுகிறார்கள், ஆனால் காட்டுவாசிகள் மொழி கேத்துக்கு புரியாததால், சந்தேகம் கொள்கிறார். இரவில் தூங்கிஎழுந்து காட்டுவாசிகளிடம் ஊருக்குல் உதவிகேட்டு தகவல் அனுப்புகிறார்.என்ன மோதி தள்ளி ஓடச்சொல்லிவிட்டு அடுப்புத்தீயை அனைத்துக்கொண்டிருக்கின்றானே????!!!!!ஆற்றின் நடுவில் சிக்கிக்கொண்ட ஜீப்பை வெளியே இழுக்கலாம் என்று என்னி. ஜீப்பின் முன்புறம் உள்ள இழுவை மோட்டாரில் உள்ள நீள கயிற்றை கரை வரைக்கும் இருத்து நுனியில் உள்ள கொக்கியை ஒரு மரத்தின் உச்சியில் மாட்டிவிட்டு, மோட்டார் மூலம் இழுக்கச்செய்கிறார். அந்நேரம், கேத் ஒருவகையான முள்செடியிடம் மாட்டிக்கொள்கிறார், சிறிய மற்றும் நிறைய கிளைகளையுடைய அந்த செடியில் சிறிது சிறிதாக நிறைய முற்கள் உள்ளன, ஆள்மாட்டினால், விடுபடுவது சிரமம், விடுபடும் முயற்சியில் மேலும் மாட்டிக்கொள்ளத்தான் முடியும். உள்ளாடைகளுடன் மாட்டிக்கொண்ட கேத் என்னசெய்வது என்று தெரியாமல் முழிக்கிறார். வேறுவழியில்லாமல் ஸ்டேனை அழைக்கிறார், கண்ணைமூடிக்கொண்டு தன்னை பார்க்காமல் உதவிசெய்து, முள்செடியிலிருந்து விடுவிக்கச்சொல்கிறார், ஸ்டேனும் கண்ணை மூடிக்கொண்டு, கடுமையாக போராடி அவரை விடுவிக்கிறார்.கண் திறந்து பாராமல் உதவிவேலையை முடித்துவிட்டு ஜீப்பை வந்துபார்த்தால் ஜீப்பை கானோம், என்னடா ஜீப்பைகானோமே என்று குழம்பி கொக்கிமாட்டிய மரத்தின் உச்சியில் பார்த்தால் ஜீப் மரத்தின் உச்சிக்கு சென்று ஊஞ்சலாடிக்கொண்டிருக்கின்றது. தலையில் கைவைத்து உட்கார்ந்துவிடுகிறார்.எங்கே என் ஜீப்?????உச்சானிக்கொம்பில் ஊஞ்சலாட்டம்.அந்தவழியாக வரும் நம் நாயகன் க்ஷி, தன் வாழ்நாளில் கன்டிராத அசிங்கத்துடன், அவலட்சன உருவத்துடன் இருக்கும் நபரை பார்க்கிறார், அந்தநபர் கேத் அவர்கள்தான். பெரிய உருவத்துடன், வெந்நிறமாக, வித்தியாசமான தலைமுடிகளுடன், மிகவயதான தோறத்துடன் இருக்கும் இவள் யார்?. இந்த வெப்பமான சூழலிலும், நிறைய உடை அனித்திருக்கின்றாளே? க்ஷியை பார்த்த கேத்துக்கு அதிர்ச்சி, காட்டுவாசி ஒருவன் தான் உடைமாற்றுவதை பார்த்துகொண்டிருப்பதை கண்டு கோபம், விலக்கிப்போகச்சொல்லுகிறார். அது எப்படி க்ஷி க்கு புரியும்?சடாரென க்ஷி க்கு ஒரு என்னம் பளிச்சிடுகிறது, ஒருவேளை நாம் தேடிக்கொண்டிருக்கும் கடவுள் இவராக இருக்குமோ? ஆமாம் இவர் கடவுள்தான் சந்தேகமே இல்லை. க்ஷி க்கு ஆச்சரியாம் தாங்கமுடியவில்லை, பூமியில் அவர் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்று. ஆனால் க்ஷி க்கு நிரம்ப மகிழ்ச்சி, ஏனென்றால் அந்த தீமையான-பொருளை இவரிடம் கொடுத்துவிடலாமே. உடனே சொல்லுகிறார், எனக்கு இது தேவைஇல்லை, நீங்கள் இதை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். கேத் அதை காதிலே வாங்காமல், இடத்தை விட்டு அகலுவதையே குறியாக இருக்கிறார். இப்படி அடவடியாக கடவுளிருக்கின்றாரே என்று க்ஷி க்கு மிக்க வருத்தமாகிவிடுகிறது.கடவுள் இப்படி அடாவடியாக நடந்துகொள்கிறாரே?கேத்தை பின்தொடர்ந்து வந்து பார்த்தால், அங்கு இன்னொரு கடவுள் இருப்பதைபார்த்து க்ஷிக்கு ரெம்ப சந்தோஷம், இந்தகடவுள் தனக்குள் தீயை வைத்திருக்கின்றாரே, வாயிலும் மூக்கின் வழியிலும் புகையை வெளியிடுகிறாரே!.நீங்கள் எங்களுக்கை இதை அனுப்பியது உங்களின் நல்ல மனதையும் தன்மையையும் காட்டுகிறது, ஆனால் இது எங்கள் குடும்பங்களுக்கு நிறைய கஷ்டங்களை தந்துவிட்டது, தயவுசெய்து இதை எடுத்துக்கொள்ளுங்கள்.உடம்புக்குள் நெருப்பை வைத்துக்கொண்டு இன்னொரு கடவுள்புதர்மனிதன் ஒருவன் கோக் பாட்டிலை நீட்டி எதோ சொல்லுகிறானே என்று இருவரும் குழம்புகிறார்கள். மரத்தின் உச்சியில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஜீப்பை பார்த்து கேத்துக்கு அதிர்ச்சியாகிவிடுகிறது, அப்பொழுது க்ஷி நித்தியாசமான சப்தத்தினை கேட்கிறார், என்னவென்று பார்த்தால், ஆச்சரியப்படத்தக்க விலங்கு அவர்களை நெருங்குகிறது. நட்க்கும்போது அதன் கால்கள் மேலும் கீழும் இயங்காமல், சுழல்கிறது, அந்தவிலங்இன் மீது ஒரு கடவுளும் அமர்ந்து வருகிறார், தலையில் நீலநிற தோல் இருக்கிறது, உடம்பில் சிகப்பு நிற தோல் இருக்கிறது. முகத்திலும்கூட முடி இருக்கிறது.அது வேறு யாரும் இல்லை, ஸ்னுக்கு உதவ வந்த கிராமத்து ஆள்தான். அவருக்கு புதர்மனிதர்களின் மொழி புரியும், பேசவும் முடியும். அவர் ஸ்டேனிடம் என்ன நடந்தது என்று வினவுகிறார்.அவர் பேசுவது க்ஷிக்கு ஆச்சரியம், என்னடா கடவுள் குரங்குபோல சப்தமிடுகிறார் என்று.அவர், க்ஷியிடம் என்ன வேண்டுமென்று அவர்கள் மொழியில் கேட்கிறார், க்ஷிக்கு ஆனந்தம், ஆஹா இந்தகடவுளுக்காவது பேச முடிகிறதே என்று. க்ஷி சொல்லுவதை மொழிபெயர்த்து ஸ்டேனிடம் சொல்லுகிறார்.நீங்கள் கொடுத்த இந்த பாட்டிலுக்கு நன்றி, ஆனால் இதை திரும்ப எடுத்துக்கொள்ளுங்கள்.நான் எதையுமே கொடுக்கவில்லையே.ஆனால் இவனுக்கு இது வேண்டாமாம்.அப்படியென்றால் இதை கீழே போட்டுவிட்டு போகவேண்டியதுதானே?அதை மொழிபெயர்த்து சொல்லுகிறார், "எங்களுக்கு இது வேண்டாம், இதை நீயே கீழெ எறிந்துவிடு"க்ஷிக்கு மிகவும் ஏமாற்றமாக போய்விடுகிறது. தன்னையே பூமியின் முடிவுப்பகுதிக்கு சென்று எறியும்படி செய்த கடவுள்களின் பொறுப்பின்மையை நொந்தபடி மீண்டும் பயனத்தை தொடர்கிறார். உன்மையிலேயே இவர்கள் கடவுள்கள்தானா என்று சந்தேகம் வந்துவிடுகிறது.ஆஹா இந்தகடவுளுக்காவது பேச முடிகிறதேஒருவழியாக கேத் கிரமத்துக்கு வந்து சேர்கிறார், கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்றாக பாட்டுப்படி, வரவேற்பு கொடுப்பதைப்பார்த்து நெகிழ்ந்துபோய்விடுகிறார்.ஊரே சேர்ந்து வாழ்த்துப்பாடல்தீவிரவாத கும்பல் ஒன்று உருக்குள் வந்துகொண்டிருப்பதை வானொலியில் செய்தியாக சொல்லுகின்றனர்.உருக்குள் வந்துகொண்டிருக்கும் தீவிரவாத கும்பல்மேய்ந்துகொண்டிருக்கும் ஆட்டுமந்தையை க்ஷி பார்க்கிறார், வித்தியாசமான விலங்குகளாக இருக்கின்றனவே ஆனால் சாப்பிடுவதற்க்கு சுவையாகத்தான் இருக்கவேண்டும். பசியுடன் இருக்கும் க்ஷி ஒரு ஆட்டை வேட்டையாட முடிவுசெய்து, பதுங்கிச்சென்று மயக்கமருந்த்து கொண்ட அம்பினால் ஒரு ஆட்டை அடிக்கின்றார். அதைப்பர்த்த மந்தையை மேய்க்கும் சிறுவன், கத்துகிறார். க்ஷி அவனை சமாதான படுத்துகிறார், நான் ஒன்றை தாக்கியிருக்கிறென், அது சீக்கிரம் தூக்கத்துக்கு சென்றுவிடும் நாம் இருவரும் சேர்ந்து அதை சாப்பிடலாம். ஆனால் அச்சிறுவன் அங்கிருந்து ஓடுகிறான், அதைக்கண்ட க்ஷி, என்னடா இப்படி ஓடுகிறான், ஒருவேளை விருந்துக்கு தன் குடும்பத்தினரையும் அழைக்கா போயிருக்கான் போல.பதுங்கிச்சென்று குறிபார்த்துமயங்கி விழுந்துவிட்ட ஆட்டினை வாட்டுவதற்காக, தீ மூட்டி தார்செய்கிறார் நம்ம நாயகன், அப்பொழுது வித்தியாசமாக சப்தமிட்டுக்கொண்டே ஒரு பெரிய விலங்கு அருகே வந்து நிற்கின்றது, இதுவும் நீண்டகால்களுக்குப்பதிலாக, சுழலும் வகையில், வட்டவடிவ கால்களை கொன்டதாயிருக்கிறது. அதிலிருந்த்து ஒடிய சிறுவனும், இன்னொருவரும் இறங்குகிறார்கள். (பெரிய காரிலிருந்து ஆடுமேய்க்கும்சிறுவனும், காவலரும் தான் இறங்குகிறார்கள்). க்ஷி மிகமும் மகிழ்ந்தவராக, வாருங்கள் கீழே வந்து உட்கருங்கள், நாம் அனைவருக்கும் போதுமான அளவுக்கான மாமிசம் இதில் உள்ளது.வாருங்கள் வாருங்கள் அருமையான விருந்துஆனால் அந்தகாவலரோ, புரியாத மொழியில் ஏதோ சொல்லி மயங்கிய அந்த ஆட்டை தூக்கி காரில் போடுகிறார்.க்ஷிக்கோ எரிச்சல், என்னடா இந்தமனிதன், மிகவும் அடாவடிக்காரனாகவும் பேராசைக்காரனாகவும் இருக்கின்றானே? முழுவதையும் அவனே எடுத்துக்கொண்டானே. சொல்லுகிறார், நீ மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ளவது என்று அறியாதவனாக இருக்கின்றாய். நீமட்டுமே முழுவது எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறாயா? பரவா இல்லை, நீயே வைத்துக்கொள், நான் எனக்காக, வேறொன்றை வீழ்த்திக்கொள்கின்றேன். என்று சொல்லி, இன்னொரு ஆட்டை குறிபார்க்கிறார். எச்சரிக்கை விடுக்கும் காவலரின் சொல் புரியவில்லை அலட்சியம் செகிறார். காவலரோ, எச்சரிக்கை செய்யும் பொருட்டு, வாணை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார். சப்தத்தில் ஆடுகள் ஓடுகின்றன, பசியுடன் இருக்கும் க்ஷியும் ஓடுகிறார். உடனே க்ஷியின் காலைகுறிவைத்து துப்பாக்கியால் சுட்டு கீழே வீழ்த்துகிறார். பிறகு க்ஷியை காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்கிறார்.மருத்துவத்துக்கு பின் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுகிறார், மொழிபெயர்ப்புக்கு, ஸ்டேனின் நன்பர்தான் வருகிறார். க்ஷியிடம் விசாரிக்கையில், ஆமாம் ஒரு விலங்இனை வீழ்த்தினேன், ஆனால் அந்த மனிதன் அதை எடுத்துக்கொண்டான், அதை என்னிடம் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. குற்றத்தை ஒப்புக்கொண்டதினால், மூன்றுமாத சிறைத்தண்டனை கொடுத்து தீர்ப்பளிக்கின்றார்கள்.குற்றத்தை ஒப்புக்கொண்டமையால் 3 மாத சிறைத்தண்டனை.ஸ்டேனின் நன்பர் அதை ஸ்டேனிடம் சொல்லி வருத்தப்படுகிறார். மூன்றுமாதம் அந்த புதர்மனிதனை சிறையிலடைத்தால் கண்டிப்பாக அவன் இறப்பது உறுதி. சுவற்றையே பார்த்திறாத அவனைச்சுற்றிலும் சுவர்மட்டுமே. மறுநாள் சிறைக்கு சென்று க்ஷியை விடுவிக்க கோருவது என்று முடிவு செய்கிறார்கள். நிறையில் நமது நாயகனோ, சாப்பிடாமல், ஜன்னலையே வெறித்தவன்னம் இருக்கின்றார்.சிறையில் நாயகன்ஒருவாரமாக சாப்பிடாமல் இருக்கும் காரனத்தை வினவுகிறார்கள், மனிப்புகேட்டுக்கொண்டு, நாளை முயற்சிப்பதாக உறுதியளிக்கின்றார்.ஸ்டேனும் அவர் நன்பரும் சிறைஅதிகாரியிடம் க்ஷியை விடுவிக்கும்படி கோருகிறார்கள். சட்டப்படி முடியாது என்று மறுத்துவிடுகிறார். ஒருவேளை யாரேனும், இவன் சார்பில் உறுதி கொடுத்து இவனை வேலை கொடுத்தால் சட்டப்படி, விடுவிக்கலாம், ஆனால், இவனுக்கோ அனுபவமும் இல்லை தகுதியும் இல்லை.ஸ்டேன் நன்பர் சொல்லுகிறார், "இவனுக்கு தகுதி இருக்கிறது, செடிகளைப்பற்றியும் விலங்குகளைப்பறியும் எங்களுக்கு வழி நடத்துவான். ஸ்டேனும் உறுதியளிக்கிறார், இவனை நான் சுற்றுச்சூழல் நிபுனராக வேலைக்கு என்னிடம் அமர்த்துகிறேன்.பிறகு க்ஷியை அழைத்துக்கொண்டு செல்கிறார்கள், க்ஷி கடவுள்கொடுத்த அந்த்த பரிசையும் எடுத்துக்கொண்டு அவர்களுடன் செல்கிறார், அதுகுறித்து ஸ்டேனின் நன்பரிடம் விளக்கம்சொல்லும்போது, அவர்களால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.சுற்றுசூழல் நிபுனர் சிறையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறார்ஸ்டேனிடம், விலங்குகளைப்பற்றிய நிபுனத்துவம் மிகுந்த புதர்-மனிதன் வேலைசெய்வதை கேள்விப்பட்டு, சிறுத்தை தாக்குதலில் காயம்பட்ட தனது நன்பரை, தேடித்தரும்படி, நன்பர் ஒருவர் வருகிறார். மூவரும் காயம்பட்டவரை தேடிச்செல்கின்றனர். சிறுத்தை தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து கால்தடத்தை தொடர்ந்து க்ஷி செல்கிறார். புதர் நிறைந்த ஒரு இடத்துக்கு போகும்போது, அதிலிருந்து ஒரு சிங்கம் வெளிவந்து மூவரையும் துரத்துகின்றது. மூவரும் அலறியபடி உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடுகிறார்கள். நல்லகாலம் அவர்கள் வந்த வேன் இருக்கிறது, அதன் அடியில் சென்று படுத்துக்கொண்டால், தப்பித்துவிடலாம். க்ஷியும், மொழி-பெயர்ப்பளரும் வேனுக்கு அடியில் சென்று படுத்துவிடுகின்றனர். நிம்மதி, அப்பாடா என்று பெருமூச்சுவிடுகிறார்கள். ஆனால் அழைத்துவந்த நன்பரோ, சிங்கத்திடம் இருந்து தப்பிக்க, வேனை எடுத்து சென்றுவிடுகிறார். கீழே படுத்திருந்தவர்களுக்கு, மீண்டும் ஆபத்து, மீண்டும் உயிரை காத்துக்கொள்ள ஓடுகிறார்கள்.ஐய்ய்ய்யோ வேனை எந்த மடையன் எடுத்தது??????ஒரு ஒல்லியான மரத்தைப்பார்த்த மொழிபெயர்ப்பளர், ஆஹா தப்பிக்க நல்ல இடம் கிடைத்த மகிழ்சியில், அந்த மரத்தில் ஏற ஆரம்பிக்கின்றார். க்ஷி வேறொரு மரத்தில் ஏறுகிறார். மொழிபெயர்ப்பளருக்கு மேலும் ஒரு சோதனை வருகிறது. ஒல்லியான அந்த மரத்தில் ஏறும்பொழுது, நடுப்பகுதி வரை பிரச்சினை இல்லாமலிருந்தது, மரத்தின் உச்சிக்கு செல்ல செல்ல பாரம் தாங்காமல், கீழே வளைய ஆரம்பிக்கின்றது. உச்சிக்கு சென்றவுடன், வளைந்து தரைக்கு வந்துவிடுகிறது, இதுக்கு மரத்தில் ஏறாமலே இருந்துவிடலாம். பிறகு க்ஷி வந்து கத்தி, பயமுறுத்தி, சிங்கத்தை விரட்டிவிடுகிறார்.நல்ல மரம், இப்படியா கீழே கொண்டுவந்துவிடும்????க்ஷி, மொழிபெயர்ப்பளர் மற்றும், ஸ்டேன் மூவரும், ஒன்றாக வேலைபார்த்து, சாப்பிட்டு, தூங்கி பொழுதைக்கழிக்கின்றனர். க்ஷி கார் ஓட்டவும் கற்றுக்கொள்கிறார்.அடுத்து படத்தின், கடைசிக்காட்சி.துரத்தும் காவலர்களிடம் இருந்து தீவிரவாதிகள் தாங்கள், தப்பிக்க, கேத் பணிபுரியும் பள்ளிக்குள் நுழைந்த்து, கேத் மற்றும் அவர் வகுப்பு குழந்தைகள் (சுமார் 30 பேர்) அனைவரையும் துப்பாக்கி முனையில் நிறுத்திவிடுன்றனர். காவலர்களிடம், கேத்தையும் குழந்தைகளையும் கொன்றுவிடுவதாக மிரட்டி, அவர்களை விலகிப்போகும்படி சொல்கின்றனர்.பள்ளிக்குள் தீவிரவாதிகள்அருகில் இருக்கும் பக்கத்து நாட்டுக்கு இந்தநாட்டு எல்லையை கடந்து சென்றுவிட்டால், தப்பிவிடுவர். தப்பிப்போகும் இடத்தை சொல்லி, அதுவரைக்கும் ஒவ்வொரு 20 மைல் தூரத்திலும், அவர்களுக்கு தேவையான சாப்பாடு செய்து வைக்கவேண்டும்,. யாரும் பின் தொடரக்கூடாது,மீறினால் குழந்தைகளும், ஆசிரியரும் கொல்லப்படுவர் என்று மிரட்டுகின்றனர்.மீறினால் குழந்தைகளும், ஆசிரியரும் கொல்லப்படுவர்குழந்தைகளுடன் ஊர்வலம் ஆரம்பிக்கின்றது.அடாத கடத்தலிலும் விடாத ரம்மி.க்ஷி, ஸ்டேன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் மூவரும், ஒருவகையான கட்டு மான்களை எண்ணிக்கை கணெக்கெடுப்பதற்காக, அருகில் உள்ள மலைக்குசென்று, தொலைநோக்கிமூலம் பார்த்து மான்களை கணக்கெடுக்க ஆரம்பிக்கின்றனர்.க்ஷி சொல்லுகிறார், அங்கு கீழே தூரத்தில் யாரோ வருகின்றனர். ஸ்டேனும் நொலைநோக்கிவழியே பார்க்கையில், ஒரு ரானுவ வாகனத்தில் இருந்துஎதையோ கீழே இறக்கி வைப்பது தெரிகிறது. உணவுப்பொருள் மாதிரியும் தெரிகிறது, எதோ உல்லாசப்பயனம் வந்திருப்பதுபோல தெரிகிறது,ஆனால், அதையெல்லாம் இறக்கிவிட்டு போய்விடுகின்றனர். இவர்களுக்கு குழப்பமாகிவிடுகிறது. என்னடா அத்துவாணக்காட்டில் இறக்கிவைத்து போய்விட்டனர்?இதற்கிடையில், துப்பாக்கிமுனையில், கடத்திவரப்பட்ட சிறுவர்களால் நடக்க முடியவில்லை, தலைவன், ஒரு சிறுவனை அழைத்து, அருகில் இருக்கும் குன்றுக்குபோய், அதன் மறுபக்கம் கீழே இருக்கும் ரானுவ வீரர்களுக்கு ஏதோ செய்தி சொல்லி அனுப்புகிறான், சிறுவனு, அந்த குன்று நோக்கி பயனிக்கின்றான், அங்குதான் நம்மவர்கள் இருக்கின்றனர்.அவர்களும் தொலைநோக்கிவழியாக, குழந்தைகள் மற்றும் பலர் துப்பாக்கியுடன் இருப்பதைப் பார்த்து நிலமையை ஊகித்து ஏதோ விபரீதம் என்று புரிந்துகொள்கின்றனர். வானொலியில் கேட்ட செய்தியை நினைவுக்கு கொண்டுவந்து, அது சம்போகா திவிரவாதிகளின் வேலையாகத்தான் இருக்கும் என்று ஊகிக்கின்றனர்.[என்ன இது துப்பாகி மனிதகளுடன் குழந்தைகள்????ஏதோ விபரீதம்ஸ்டேன் ஒரு திட்டமிடுகிறார். க்ஷியை அந்த சிறுவன் ஆடையை அனிந்து அங்கு போய், விலங்குகளுக்கு பயன்படுத்தும் ஒருவகை மயக்கமருந்த்தைஊசிமூலம் அந்த்த தீவிரவாதிகளுக்கு ஏற்றிவிடவேண்டும். இந்த திட்டத்தினை ஒரு கடிதம் மூலமாக கேத்துக்கு தெரிவித்து, அவர்கள் விழுந்தவுடன், துப்பாகிகளை அப்புறப்படுத்திவிடவேண்டும். க்ஷியிடம் திட்டம் விளக்கப்படுகிறது, அவரும் தயாராகிறார்.அங்கிருக்கும் இவர்கள் எப்படி இந்த டப்பாவுக்குள் வந்தனர்கீழே சாப்பாட்டு பந்தி முடிந்தபிறகு, தலைவர் 1 மணிநேரம் ஓய்வு அறிவித்து தூங்கச்செல்கிறார். இதுதான் சமயம் என்று சீட்டாட்ட பிரியர்கள்இருவரும், சீட்டு விளையாட மறைவான இடத்துக்குப்போகின்றனர்.ஊசியை இப்படி அடிக்கவேண்டும்க்ஷி தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை உணர்கிறார், புறப்படுகிறார். சரியாக செயலாற்றுகிறார்.புறப்பட்டுவிட்டார் வெற்றித்திருமகன்குழந்தைகள் அவரை வித்தியாசமாக பார்ப்பதும், ஊசியால் அவர்களை அடிக்கும்போது திடுக்கிடுதலைபார்த்து குழந்தைகள் சிரிப்பதும், க்ஷிசிரிக்காதீர்கள் என்று முகபாவனை காடுதலும், கடிதத்தை கேத் குழப்பத்துடன் வாங்கிக்கொள்ளுதலும் நன்றாக காட்சியமைக்கப்பட்டு இருக்கும். யார் அனுப்பிய கடிதமிது என்று கேத்துக்கு புரியவில்லை.என்ன இது காதல் கடிதமா?வெற்றிகரமாக அனைவரும் தூங்கிவிடுவர், சீட்டடச்சென்ற இருவரைத்தவிர. கேத் மற்றும் குழந்தைகள், அனைவரும் தீவிரவாதிகளின் துப்பாகிகளை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள மலைக்குகைக்குள் சென்று ஒளிந்துகொள்கிறார்கள்.துப்பாக்கியை போட்டுவிட்டு தூக்கம்ஸ்டேனும் மொழிபெயர்ப்பளரும் அந்த இருவருடனும் சண்டையிட்டு அவர்களை வீழ்த்துகின்றனர். அப்பொழுது ஜீப்பை எடுத்துவரச்சென்ற க்ஷி, கியர் எப்படிப்பொடுவது என்று குழம்பி, ரிவர்ஸ் கியரைபோட்டுவிட, வண்டி பின்நோக்கிச்செல்கிறது. சமயோசிதமாக அவரும் பின்னால் இருந்த்து ஓட்டிவருகிறார். இதைப்பார்த்த ஸ்டேன் அவருக்கு உதவ செல்கிறார், அப்பொழுது ஸ்டேனின் நன்பர் காவலருடன் அங்கே வருகிறார். ஸ்டேன் அவரிடம் துப்பாக்கிகளைகொடுத்துவிட்டு, க்ஷிக்கு உதவச்செல்கிறார்.அடடா இந்த குதிரையை அடக்குவது சிரமமாக இருக்கேநடந்த விவரங்கள் எதுவுமே தெரியாமல், கேத்தும், குழந்தைகளும் வெளியே வருகின்றார்கள், அங்கு ஸ்டேனின் நன்பர் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு நிற்பதைப்பார்த்து, அவர்தான் உதவிசெய்தவர் என்று நினைத்து, நன்றி சொல்லி அவருடன் சென்றுவிடுவார். ஸ்டேனுக்கு கடுப்பு ஏறுகிறது, கேத்மீதான காதலும் ஏறுகிறது.தண்டனைக்காலம் முடிந்த பிறகு, க்ஷி, தன் பயணத்தை தொடர விரும்புவதாக சொல்லுகிறார். ஸ்டேன் க்ஷிக்கு ஏதாவது கொடுக்க விரும்புகிறார், ஆனால் க்ஷிக்கு உதவுவதுபோல எந்த பொருளும் இல்லை, சிறிது பணம் கொடுக்கின்றார். அதை வாங்கிக்கொண்டு க்ஷி விடைபெற்று பயனத்தை தொடர்கிறார்.இருவரும் கஷ்டத்துடன், க்ஷிக்கு விடைகொடுக்கிறார்கள்.சென்றுவா நன்பனே, உன் பிரிவுத்துயரை நாங்கள் எப்பாடி தாங்கப்போகிறோமோ தெரியலைஸ்டேன் கேத்திடம் தன் காதலை சொல்லும் காட்சி மிகுந்த நகைச்சுவையாக இருக்கும். சார்ளி ச்ச்ப்ளின் பாணியில் அங்கிருக்கும் பொருட்களையெல்லாம் தெரியாமல் பதட்டத்தில் மோதி கீழே தள்ளிவிடுவார், கேத்தும் அடக்கமாட்டாமல் சிரித்தவாறே காதலை ஏற்றுக்கொள்ளுவார்.பிறகு ஒருநாள் க்ஷி பூமியின் முடிவை கண்டுபிடிக்கிறார். சந்தோஷத்துடன், தீமைநிறைந்த அந்தப்பொருளை தூக்கி பூமிக்கு வெளியே எறிந்துவிட்டு. குடும்பம் இருக்கும் இடத்துக்கு திரும்பி வருகிறார், அனைவரும் குதுகலமாக மகிழ்ச்சியுடன் வரவேற்று மகிழ்கின்றனர்.அடடா இதுதான் பூமியின் முடிவுப்பகுதியா?பூமிக்கு சொந்தமில்லாத இந்தப்பொருள் பூமியைவிட்டு போகக்கடவதுகுடும்பத்துடன் குதுகலம்